http://ns7.tv/ta/hc-asks-tn-govt-reply-banner-permission-issue.html
பேனர்கள் வைக்க அனுமதி வழங்கிய விவகாரம்: விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு உத்தரவு
Updated on January 05, 2016
பேனர்கள் வைக்க அனுமதி வழங்கிய விவகாரம்: விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு உத்தரவு

கடந்த 2015ம் ஆண்டு பொது இடங்களில், டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு அனுமதி வழங்கிய முழு விவரங்களை, 3 வாரத்திற்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 31ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவின் போது, பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டதாக, உயர்நீதிமன்றத்தில், டிராபிக் ராமசாமி மற்றும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இது குறித்த விசாரணை, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் புஷ்பா சத்தியநாராயணா முன் வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், பொதுக்குழுவின் போது ஒரே நாளில், 350 பேருக்கு டிஜிட்டல் பேனர் வைக்க அனுமதி வழங்கியதாகவும், இதே போல் மற்றவர்களுக்கு முறையான அனுமதி வழங்கப்பட்டதா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், கடந்த 2015ம் ஆண்டில், டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு அனுமதி வழங்கிய விவரங்களை, தமிழக அரசு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கின் விசாரணையை, வரும் பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.